Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் முன்பாகவே லியோ படத்தின் பிரிமியர் காட்சிகள்… தயாரிப்பாளர் திட்டம்!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (07:43 IST)
நேற்று முன் தினம்  வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் லலித், தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்காததால் படம் காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படம் ரிலீஸாகும் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பாகவே படத்துக்கான பிரிமியர் காட்சிகளை திரையிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் வழக்கமான டிக்கெட் விலையை விட பலமடங்கு அதிகமாக விலை வைக்கப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments