Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’லியோ’ டிரைலர் விவகாரம்.. திருப்பூர் சுப்ரமணியனை கலாய்த்த புளூசட்டை மாறன்..!

Advertiesment
’லியோ’ டிரைலர் விவகாரம்.. திருப்பூர் சுப்ரமணியனை கலாய்த்த புளூசட்டை மாறன்..!
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (17:44 IST)
தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த ட்ரெய்லர் நேற்று சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் இந்த  டிரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கில் உள்ள இருக்கைகளை சேதப்படுத்தியதாக  குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதுகுறித்து ரோகிணி திரையரங்கு நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றாலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் அவர்களுக்கு சொந்தமான திரையரங்கிலும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்ததை புளூசட்டை  மாறன் குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது
 
 திருப்பூர் சுப்ரமணி சார்.. இது உங்க திருப்பூர் சக்தி சினிமாஸ் தியேட்டர்னு சொல்றாங்க? உண்மையா? தைரியம் இருந்தா பதில் சொல்லுங்க பாப்போம்.
 
ரசிக வெறித்தனத்தை இப்படி கிளப்பிவிட்டு பணம் பண்றது அவமானம் இல்லையா? வயசுக்கேத்த பக்குவம் இன்னுமா உங்கள மாதிரி தியேட்டர் முதலாளிகளுக்கு வரலன்னு தமிழக மக்கள் கேக்கறாங்க.
 
எப்பதான் சார் நீங்க திருந்துவீங்க? லியோ முதல் மூணு அல்லது ஐந்துநாள் ஷோ.. டிக்கட் எல்லாம் கவுண்ட்டர் ரேட்ல விப்பீங்களா? இல்லன்னா 2,000, 5,000 ரூவான்னு போகுமா?
 
இதுல எனக்கு அட்வைஸ் பண்ணி யூட்யூப் சேனல்களுக்கு கம்பீரமா பேட்டி வேற தர்றீங்க.
 
வெரி ஃபன்னி ஐயா. வெரி ஃபன்னி!!
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் 'லியோ' பட ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் அறிமுகம்