இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லலித் குமார் படம் பற்றிய சில தகவல்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் “இன்னும் விஜய் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் நான் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டேன். சிறப்பாக வந்துள்ளது.  படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ்நாட்டில்தான் நடக்கும். ஆனால் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆடியோ ரிலீஸுக்கு பிறகு தொடங்கும்.” எனக் கூறியுள்ளார்.
 
									
										
			        							
								
																	மேலும் அவர் லியோ பற்றி “படத்தில் இடைவேளைக்கு முன்பாக ஒரு சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. அது ரசிகர்களைப் பெரியளவில் கவரும்” என்றும் கூறியுள்ளார்.