இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் சரியாக எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது. முதல்வாரத்தில் மட்டும் 461 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் பிரிப்பது சம்மந்தாக விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் “லியோ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நான்தான் தயாரிப்பாளர் லலித்துக்கு 2.5 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்தேன். எங்களுக்கு லியோ படத்தால் எந்த லாபமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.