Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விஜய்யின் லியோ!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:13 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தியாவைப் போலவே இந்த படத்துக்கு தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்த படம் ஒருநாள் முன்பாக அக்டோபர் 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரீமியர் ஷோ வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments