Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டம் கண்ட ''லியோ ''படக்குழு !! ராஜேஷ்வரி பிரியா டுவீட்

Advertiesment
leo
, புதன், 28 ஜூன் 2023 (13:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல் வெளியானது.

அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இப்பாடல் காட்சியிலும், போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வலுத்தது. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.

இளைஞர்களை மதுகுடிக்கவும், புகைப்பிடிக்கவும் தூண்டுவதா என்று  நடிகர் விஜய்க்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபற்றி அவர் சமூக ஊடகங்களில் அளித்த பேட்டியும் வைரலானது. அதில் சமூக பொறுப்பில்லாமல் போதைப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பாடலை பாடி நடித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு கவனத்திற்கு என்று வீடியோ பகிர்ந்திருனந்தார்.

இந்த நிலையில்,  நேற்று லியோ படக்குழுவினர் இப்பாடல் காட்சியில், புகைப்பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும் என்று பதிவேற்றியது.

இதுபற்றி ராஜேஷ்வரி பிரியா  தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!

கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.

வெற்றி நமதே!!!
இன்னும் தொடரும்……’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரின் தகாத உறவு உண்மையா? விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அசின்!