Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த படத்தை எப்போது தொடங்குகிறார் லெஜண்ட் சரவணன்?

அடுத்த படத்தை எப்போது தொடங்குகிறார் லெஜண்ட் சரவணன்?
, வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:51 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பையும் கேலி கிண்டலையும் பெற்றது. இந்நிலையில் இப்போது தன்னுடைய க்ளின் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி மீசையுடன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் சரவணன்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக மூன்று கதைகளை கேட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்றில் அடுத்து நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் சுனில்.!