Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னணி இயக்குனர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு

முன்னணி இயக்குனர் படத்தில்  ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு
, வியாழன், 19 மே 2022 (17:40 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு இவர் பிரபல இயக்கு நரின் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயக்கொண்டா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர்  ஆர்.கண்ணன். அதன் பின்,  பரத் நடிப்பில் கண்டேன் காதல்,  சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதையத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் உருவாக்கியுள்ளார். அதேபோல், மிர்ச்சி சிவா, யோகிபாபு மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் காசேதான் கடவுள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில், ஆர். கண்ணன் அடுத்டு, யோகிபாபு நடிப்பில் பெரியாண்டவர் என்ற படத்தை இயக்கவுள்ளார்.   இப்படத்தில் சிவன் வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.  இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து மூன்று ரிலீஸ்… அருள்நிதியின் “D ப்ளாக்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!