ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மன்னன்' திரைப்படம் மீண்டும் தமிழில் ரீமேக் செய்யபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிவலிங்கா'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் ரஜினி நடிக்க, பி.வாசு இயக்கத்தில் வெளியான 'மன்னன்' படத்தின் ரீமேக்காகும்.
ரஜினியோடு நடித்த கவுண்டமணி வேடத்தில், வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். குஷ்பு, விஜயசாந்தி உள்ளிட்டோர் வேடங்களில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்க தீர்மானித்துள்ளார்கள்.