Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’லத்தி ’’பட டிக்கெட் வருவாயில் விவசாயிகளுக்கு உதவி- விஷால்

Advertiesment
lathi
, புதன், 14 டிசம்பர் 2022 (22:36 IST)
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் மூலம் வரும் வருவாயில் விவசாயிகளுக்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி   நடிகர் விஷால். இவர் நடிப்பில், இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லத்தி.

இப்படத்தில், சுனைனா, பிரபு, இயக்குனர் ஏ வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டிரெயிலர்   சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில், கான்ஸ்டபில் முருகானந்தம் ஆக,  லத்தி சார்ஜ் ஸ்பெஷலிஸ்ட்  ஆக நடித்துள்ள விஷால், அதிரடி காட்சிகளில் ஆக்சனில் அசத்தியுள்ளார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இவருடன் பிரபு , இயக்குனர் ஏ வெங்கடேஷும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புரமோசன் பணிகளில் விஷால் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், லத்தின் படத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயில் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவேன் என்று விஷால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த்: தேவஸ்தானம் வரவேற்பு