Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இப்போ ஆன்மீகம் பத்தி புரிதல் இருக்கு… அதனால”- பாபா சிறப்பு திரையிடலில் லதா ரஜினிகாந்த்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (08:17 IST)
பாபா படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று சென்னையில் நடந்தது. அதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது.

முன்னதாக பாபா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. ஆனால் டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே பாபா படத்தில் சில பில்டப் காட்சிகள் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் அந்த காட்சிகளைக் கூட இப்போதைய காலத்தில் டிரைலரில் வைக்க, அது சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில் பாபா படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் லதா ரஜினிகாந்த், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். திரையிடலுக்குப் பின்னர் பேசிய லதா ரஜினிகாந்த் “ 20 வருடத்துக்கு முந்தி இருந்ததை விட இப்போது மிகவும் எமோஷனல் ஆக உள்ளது. அவரை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களாகவே உணர்கிறேன். இப்போது ஆன்மீகம் பத்தி நிறைய புரிதல் இருக்கு. அதனால் பாபா படம் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு!

சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்தோம்-டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர் மோகன் பாபு பேச்சு!

கடல் மட்டத்தில் இருந்து 33000 அடி உயரத்தில் ஆக்‌ஷன் காட்சி… பிரம்மாண்டத்துக்கு தயாராகும் சல்மான் கான்& முருகதாஸ்!

அமெரிக்காவில் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?... சாதனை படைத்த பிரபாஸின் கல்கி!

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments