கோச்சடையான்' படத்திற்கு கடன் பெற்ற விவகாரம்: விசாரணையில் இருந்து லதா ரஜினிக்கு விலக்கு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (11:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்துக்கு கடன் வாங்கிய விவகாரம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
கோச்சடையான் திரைப்படத்துக்கு கடன் வாங்கிய தொடர்பான வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கோச்சடையான் வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் லதா ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூர் சிவில் கோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது ஆட் புரு அன்ட் மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments