Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (10:11 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மே மாதத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் விஷால் ‘லத்தி’ படத்தில் கவனம் செலுத்தியதால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பில் கல்குவாரியில் வைத்து சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்கு கால் முட்டியில் அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments