கோலிவுட் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் ஒருசில நடிகர்கள் தங்களுடைய திறமையை முழுமையாக நம்பாமல் தங்கள் படங்களில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்களின் படங்கள், பாடல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி படத்தை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
இதுபோன்ற புரமோஷன்களால் படம் எடுபடாது என்றும் கதையில் கவனம் செலுத்தினால் யாருடைய புரமோஷன்களும் தேவையில்லை என்பதும்தான் உண்மை என்றும் திரையுலக பிரமுகர்கள் கூறுகின்றனர்.
இது உண்மை என்பதை சமீபத்தில் வெளியான 'துருவங்கள் 16', குற்றம் 23', மற்றும் மாநகரம் போன்ற படங்கள் நிரூபித்தன.
ஆனால் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரஜினியின் துணையோடு கடந்த வாரம் வெளியான 'மொட்ட சிவா கெட்ட சிவா', விஜய்யின் புரமோஷனோடு இந்த வாரம் வெளிவந்த 'புரூஸ்லீ' ஆகிய படங்களை நெட்டிஸ்னகள் மிக கொடூரமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக 'புரூஸ்லிக்கு நேற்று முதல் நெட்டிஸன்கள் கொடுத்து வரும் கமெண்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இனியாவது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் ரஜினி, விஜய்யை நம்பாமல் கதையில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.