Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி நேரத்தில் இடம் மாற்றம், வெறும் 10 பேர் முன்னிலையில் தாலி கட்டிய யோகி பாபு..!

Advertiesment
கடைசி நேரத்தில் இடம்  மாற்றம், வெறும் 10 பேர் முன்னிலையில் தாலி கட்டிய யோகி பாபு..!
, வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:24 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
இந்நிலையில் நேற்று  பிப்ரவரி 5ஆம் தேதி திருத்தணியில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் முதலில் திருத்தணி கோவிலில் தடபுடலாக நடக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் திருமண இடத்தை மாற்றிய யோகி பாபு செய்யாறில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார். 
 
குறிப்பாக இந்த திருமணத்தில் வெறும் 10 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அவ்வளவு ஏன் மணப்பெண்ணின் அம்மா-அப்பா கூட இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இத்திருமணத்தில் பல ரகசியங்கள் இருப்பதாக வெளியுலக வட்டாரம் பேசிக்கொள்கிறது. இது குறித்து யோகி பாபுவே தெளிவான விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை: என்னென்ன ஆவணங்கள் சிக்கின?