Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை மண்சரிவு: அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த்..!

Siva
திங்கள், 9 டிசம்பர் 2024 (09:32 IST)
சமீபத்தில் பெரிதாக கனமழையின் போது திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக வீடு இடிந்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் இன்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் செல்லும் ரஜினிகாந்த் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருவண்ணாமலை மண் சரிவில் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ’எப்போ நடந்தது’ என்று கேட்டார். அதற்கு ஃபெஞ்சல் புயலின் போது நடந்தது என்று செய்தியாளர்கள் கூறிய போது ’ஓ மை காட் எக்ஸ்ட்ரீம்லி  சாரி’ என்று பதில் அளித்தார்.

 மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்வதாகவும், படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 திருவண்ணாமலை மண்சரிவு ஏற்பட்ட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து பத்து நாட்கள் ஆன பின்னர் அந்த சம்பவம் குறித்து தெரியாமல் ’எப்போ நடந்தது’ என்று ரஜினிகாந்த் கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று நாளில் 600 கோடி ரூபாய் வசூல்… நிக்காமல் செல்லும் ‘புஷ்பா 2’ எக்ஸ்பிரஸ்!

சூரியின் அடுத்த படத்திலும் வெற்றிமாறன் பங்களிப்பு… இயக்குனர் இவரா?

வணங்கான் ஆடியோ விழாவுடன் பாலாவின் 25ஆம் ஆண்டு விழா: தயாரிப்பாளர் அறிவிப்பு..!

இந்த தெலுங்கு படத்தின் ரீமேக்கா விஜய்யின் 69 ஆவது படம்..!

ஜெயிலர் 2 படத்துக்காக நெல்சன் போட்ட கண்டீஷன்… சம்மதிக்குமா சன் பிக்சர்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments