Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா" பட புதிய பாடல் இதோ!

கீர்த்தி சுரேஷின்
, புதன், 28 அக்டோபர் 2020 (18:25 IST)
இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம். பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. நடிகையர் திலகத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்ணியமைய திரைப்படம் இது.

முந்தைய படங்களில் இருந்த அளவு இல்லாமல் இந்த படத்திற்காக பெருமளவில் உடல் எடையை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.  ட்ரெய்லரை பார்த்த பலர் இந்த படத்திற்காகவும் கீர்த்தி விரைவில் தேசிய விருது பெறுவார் என பாராட்டினர். இந்த படம் நவம்பர் 4 அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் தற்ப்போது இந்த படத்தின் Lacha Gummadi  என்ற புதிய பாடல் ஒன்றை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த லிரிகள் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்கசெய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்… இன்னொரு ஹீரோ யார் தெரியுமா?