லாபம் மணிமகுடமாக இருக்கும்… எஸ் பி ஜனநாதன் குறித்து தயாரிப்பாளர் அறிக்கை!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (16:32 IST)
மறைந்த முன்னணி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கியுள்ள லாபம் திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே மணிமகுடமாக இருக்கும் எனக் கூறியுள்ளார் தயாரிப்பாளர்

லாபம் படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments