Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாபம் படத்தின் இரண்டாவது டீஸர் ரிலிஸ்!

Advertiesment
லாபம் படத்தின் இரண்டாவது டீஸர் ரிலிஸ்!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:03 IST)
லாபம் படத்தின் இரண்டாவது டீஸர் சற்று முன்னர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் 15 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் சுமார் 5 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று லாபம். மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக இரண்டாவது டீசரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த டீசர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சார்பட்டா பரம்பரை தொலைக்காட்சி உரிமை… கலைஞர் டிவிக்கு கைமாறியது எப்படி?