Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் இதுதான்: நாயகன், நாயகி யார்?

Advertiesment
பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் இதுதான்: நாயகன், நாயகி யார்?
, திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:34 IST)
பிரபல இயக்குனர்கள் ஒரு பக்கம் திரைப்படங்களை இயக்கி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தங்கள் உதவியாளர்களுக்கு உதவி செய்வதற்காக தங்களுடைய நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஏஆர் முருகதாஸ், அட்லி, கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித் போன்றோர் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தனர் 
 
அந்த வகையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது அவர் தயாரித்து வரும் மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் ஆகிய இருவரும் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ’குதிரை வால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் பெண்ணுக்கு புத்தகம், மாணவருக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் பிரபல நடிகர் !