Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் குஷ்பு... வெளியான புகைப்படம்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:08 IST)
நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.  பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து அந்த பதவி தனக்கு வரும் என்று காத்திருந்தாராம். ஆனால் அதுவும் கிடைக்காமல் அண்ணாமலைக்கு கிடைத்ததும் அதிருப்தியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இப்போது கோகுலத்தில் சீதை என்ற சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடக்க உள்ள டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக கலந்துகொள்ள உள்ளாராம். அவருடன் நடன இயக்குனர் பிருந்தாவும் கலந்துகொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘தலைவன் தலைவி’!

28 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் ‘டிஸ்கோ’ சாந்தி!

ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் எல்லை மீறி நடக்கத் தொடங்கினார்… தமன்னா பகிர்ந்த தகவல்!

எனக்குக் கேப்டன் மகன் என்கிற பெருமை போதும்… மேடையில் கண்ணீர் விட்ட விஜய பிரபாகரன்!

இவர்கள்தான் எனது தூண்கள்.. எனது வெற்றிகளில் பங்கு – லோகேஷ் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வ பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments