Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவிலும் ஸ்கோப் இல்லையா? மீண்டும் சீரியலுக்கு திரும்பும் குஷ்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:37 IST)
நடிகை குஷ்பு தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.  பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து அந்த பதவி தனக்கு வரும் என்று காத்திருந்தாராம். ஆனால் அதுவும் கிடைக்காமல் அண்ணாமலைக்கு கிடைத்ததும் அதிருப்தியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் ஆணையிட்டால்.. எம்ஜிஆர் ஸ்டைலில் செகண்ட் லுக்! - அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்!

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்: அநாகரிக பேச்சு குறித்து இயக்குநர் மிஷ்கின்..!

எதுவும் திருடு போகல.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்! - கஞ்சா கருப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments