Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவஜோதி பயோபிக்குக்கு எதிர்ப்பு கிளப்பும் சரவண பவன் அண்ணாச்சி வாரிசுகள்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:30 IST)
ஜீவஜோதியின் பயோபிக் திரைப்படத்தை எடுக்க சரவண பவன் ஓட்டலின் தற்போதைய உரிமையாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப உள்ளார்களாம்.

தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில மாதங்களுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் இப்போது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஜீவஜோதியின் சட்டப்போராட்டத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இப்போது செய்துவருகிறது. விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றி விவரம் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த படம் வெளியானால் தங்களின் பிராண்ட் பாதிக்கப்படும் என சரவண பவன் ராஜகோபாலின் வாரிசுகளும் தற்போது அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர்களும் அச்சத்தில் உள்ளனராம். மேலும் அந்த கதை தங்களின் தந்தையை தவறாக காட்டும் விதமாக படமாகும் என்பதால் அதை எடுக்க விடாமல் தடை செய்ய சட்ட ரீதியான முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments