குஷ்புவுடன் இணைந்து ஹாக்கி விளையாடும் பிரபல இசையமைப்பாளர்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (09:11 IST)
குஷ்பு தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கிய 'மீசையை முறுக்கு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது.

குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் அடுத்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டது. சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ மற்றும் 'மான் கராத்தே ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் தேசிங்கு என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக அனேகா என்ற நடிகை இந்த படத்தில் நடிக்கவுள்ளார். ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இசையும் அமைக்கும் ஆதி இந்த படத்திற்காக எட்டு பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அரவிந்த் சிங் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments