Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் அதர்வாவின் குருதி ஆட்டம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:50 IST)
அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இப்போது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்ஜெட் வெறும் ரூ.70 லட்சம்.. வசூலோ ரூ.70 கோடி.. திரைப்படம்ன்னா இப்படி இருக்கனும்..!

ரத்தக் காட்டேரியாக மாறும் ராஷ்மிகா!? கவனம் ஈர்க்கும் Thama Teaser!

நீல நிற சேலையில் எக்ஸ்ட்ரா அழகோடு ஜொலிக்கும் திவ்யபாரதி!

கவர்ச்சித் தூக்கலான கலர்ஃபுல் உடையில் மிளுறும் திஷா பதானி!

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘மாமன்னன்’ படங்களை மிஸ் செய்துவிட்டேன் – அனுபமா வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments