Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

J.Durai
புதன், 1 மே 2024 (14:51 IST)
'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது  ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
 
படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
 
படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன் பேசியது ....
 
"இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார். 
 
இயக்குனரும்  பாடலாசிரியருமான பிரம்மா பேசியது ...
 
"சமீபகாலங்களில் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வருவதில்லை. எல்லாம் வன்முறை படங்கள் தான். பல வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கான படமாக 'குரங்கு பெடல்' வந்துள்ளது. பெரிய நம்பிக்கையை இந்தப் படம் கொடுக்கும். எனக்குப் பிடித்த இந்தப் படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார். 
 
நடிகர் ஜென்சன் திவாகர் பேசியது ...
 
"படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". 
 
தயாரிப்பாளர் சவிதா பேசியது ...
 
"இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி. 'குரங்கு பெடல்' கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது". 
 
தயாரிப்பாளர் சஞ்சய் பேசியது ...
 
"எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்‌ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!". 
 
நடிகர் காளி வெங்கட் பேசியது .....
 
"இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. 'குரங்கு பாடல்' கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்". 
 
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியது ....
 
"இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். 'வாகை சூடவா' படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி". 
 
இயக்குநர் கமலக்கண்ணன் பேசியது ....
 
"இந்தப் படம் மக்களிடம் போய் சேரக் காரணமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை அவர்களுடைய சொந்த படமாக நினைத்து உருவாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. சென்சிபிளான படம் எடுத்துள்ளோம். பார்த்துவிட்டு செல்லுங்கள் என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் கைவிட்ட பிளடி பெக்கர் படத்தைப் பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

தளபதி 69 படத்தில் இருந்து விலகினாரா சத்யராஜ்?

இந்தியன் 3 ஓடிடி ரிலீஸுக்கு ஒத்துக்கொள்ளாத கமல் &ஷங்கர்… லைகா என்ன முடிவு எடுக்கும்?

பிரதர் ரிலீஸுக்காக 4 கோடி ரூபாய் தண்டம் கட்டிய ஜெயம் ரவி!

புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments