Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி அரசு-தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது-மாணிக்கம் தாகூர் எம்.பி!

Advertiesment
Manikam thakur

J.Durai

மதுரை , வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:46 IST)
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரையில் வந்த  நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...
 
தேர்தல் ஆணையத்தின் மேல் இருக்க வேண்டிய நம்பிக்கை முழுமையாக போய்விட்டது.
 
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாஜகவின் பீ. டீம். போல செயல்படுகிறார்கள்.
 
கடந்த பாராளுமன்ற கூட்டத்தோடு கடந்த தொடரிலே தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சட்டத்தில் தெரிந்தது மோடி அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவை போல செயல்பட விரும்புகிறது என்பது. இப்பொழுது அது தெளிவாக தெரிகிறது.
 
இந்த முடிவு என்பது பேசியது  மோடி நோட்டீஸ் கொடுப்பது பிஜேபி தலைவருக்கு மோடிக்கு பேசிய மோடியை பற்றி மத பிரிவினையை பற்றி பேசிய மோடிக்கு நோட்டீஸ் கொடுப்பதற்கு பயப்படுகின்ற ஒரு தேர்தல் ஆணையத்தை நாம் பார்க்க முடிகிறது.
 
டி.என் .சேஷன் போன்ற தனித்தன்மை உள்ள தேர்தம் ஆணையம் தன்னுடைய தனித்தன்மை இழந்து இன்று பிஜேபி யுடைய ஒரு பி "B" டீ ம் போல செயல்படுவது என்பது  மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
இது இந்திய தேர்தல் வரலாற்றில் மிக  அவமானகரமானது.
 
இந்திய தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட பாரபட்சமான முடிவுகளை எடுப்பது என்பது இந்திய தேர்தல் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும்.
 
2வது கட்ட தேர்தல் பாரபட்சமாக செயல்பாடு? மோடி அரசும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
2 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  மேலும், கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  அடுத்தபடியாக இது நடக்கிறது எப்படி எல்லாம் பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் செயல்பட போகிறதோ என்று ஐயமும் ஏற்படுகிறது.
 
உங்களுடைய குரலைக் கேட்டு மக்களுடைய பிரச்சினை பார்த்து உச்ச நீதிமன்றம் தான் தலையிட முடியும்.
 
உச்சநீதிமன்றம் தான்  தேர்தல் ஆணையத்தை சரியான நிலைக்கு கொண்டு வர வேண்டியது. 
 
உச்சநீதி
மன்றத்தினுடைய   பொறுப்பாகும்
நம்புவோம். 
 
நல்லது நடக்கும் நம்புவோம். தேர்தல் ஆணையத்தை பொருத்தமட்டில் மக்களுக்கு முன்னாலும், உச்சநீதிமன்றத்திற்கு முன்னாலும், இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கக்கூடியது நீதிமன்றங்களும் மற்ற அமைப்புகளுமே. இந்தியாவுடைய ஜனநாயகத்தை காப்பதற்கான கடைசி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளை பொருத்த மட்டுமே தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக இல்லை. ஆனால், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறா மே ஒழிய எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற - ஆணையம்.
 
இந்த தேர்தல் ஜனநாயகத்தை காக்கின்ற தேர்தல்  ஜனநாயகத்தை காப்பாற்றப்படுமா இந்திய  அரசியல் சாசனம் காப்பற்றபடுமா என்பதை பொறுத்து இருக்கிறது, மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். 
 
மக்கள் எடுக்கும் நல்ல முடிவை உண்மையான முடிவை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் என நம்புகிறோம்.
 
விரும்புகிற மிக எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்லவில்லை ஆட்சியாளர் ஜனநாயகத்தை சம்பந்தப்படுத்த தேர்தல் இந்த தேர்தலில் மக்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்களுடைய நல்ல முடிவை அறிவிக்கின்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்:மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்