Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"குப்பத்து ராஜா" திரைவிமர்சனம்!

, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (14:00 IST)
'சர்வம் தாளம் மயம்' படத்திற்கு கிடைத்த  நல்ல வரவேற்பை தொடர்ந்து, தற்போது ஜி.வி.பிரகாஷ், வித்தியாசமான லோக்கல் கதாபாத்திரத்தில் இறங்கி நடித்திருக்கும் திரைப்படம் 'குப்பத்து ராஜா' இப்படம்  இன்று திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றிய அலசலை இங்கே காணலாம். 

நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை பல்லக் லால்வானி
இயக்குனர் பாபா பாஸ்கர்
தயாரிப்பு: சரவணன் 
இசை ஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி
 
 
கதைக்கரு:
 
சென்னை குப்பத்தில் வாழும் சில குடிசை வாசிகளின் வாழ்வில் நிகழும் அமைதியின்மையை சில சமூக விரோத சக்திகள் எவ்வாறு உருவாக்குகின்றன என்பதே படத்தின் கதை.
 
 
கதைக்களம்:- 
 
 
படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குப்பத்து ராஜா ராக்கெட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்  சேட்டு கடையில் வண்டி சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.ஆரம்பம் முதலே அந்த பகுதியில் பெரிய கையான பார்த்திபனுடன் ஜீவிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் ஊர் கவுன்சிலர், வேறு சில ரௌடிகளுடனும் அவருக்கு பகை வளர்கிறது.
 
ஒரு சமயத்தில் எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு ஜீவி பிரகாஷின் அப்பா எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்துவிடுகிறாரகள். அதற்காக பார்த்திபன் உட்பட பலர் மீதும் சந்தேகப்படுகிறார் ஜீ.வி பிரகாஷ். 
 
பார்த்திபன், படம் முழுக்க கையில் இரண்டு எம்ஜிஆர் புகைப்படம் போட்ட பெரிய மோதிரத்தோடு பந்தாவாக சுற்றுகிறார். எம்ஜிஆர் ரசிகர் என காட்டுவதால் என்னமோ அவரை மக்களுக்காக ஓடி ஓடி உழைப்பவர் போல காட்டியுள்ளார் இயக்குனர். 
 
ஜீ.வி.பிரகாஷ் காதலியாக நடித்த பாலக் லால்வாணி தமிழ் தெரியாது என்பதற்காக வாயில் சிவிங்கம் வைத்து நடித்துள்ளார் போல.. படத்தில் ஒரு இடத்தில் கூட லிப்சிங்க் இல்லை. நடிகை பூனம் பஜ்வா படம் முழுவதும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். தொப்புள் தெரியும் அளவுக்கு சேலை, தோள் தெரியும் அளவுக்கு கவர்சியான ஜாக்கெட் என அம்புட்டு கிளாமராக நடித்துள்ளார். 
 
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு மட்டுமே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஈர்த்தது. மகன் எவ்வளவு வயதானாலும் அவன் எப்போதும் தந்தைக்கு குழந்தைதான் என கூறுவதை போல  மகனுக்கு ஒரு பைக் மட்டும் வாங்கி கொடுத்துவிட்டால் நான் சீமானாக கண்ணை மூடுவேன் என கூறும் தருணம் வரை எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு மனதில் நிற்கிறது. மேலும் படத்தின் முதல் பாதியில் வரும் யோகி பாபாவுவின் கவுண்டர் மற்றும் காமெடி தியேட்டரில் விசில் பறக்கிறது.
 
 
படத்தின் ப்ளஸ் :
 
முட்டாள்தனமாக நடித்திருக்கும் எம்.பாஸ்கர் கதாபாத்திரம் பார்த்திபனை விட அட்டகாசம். யோகி பாபுவின் காமெடி மற்றும் பாலக் லால்வானியின் நடிப்பு ஓகே. சேரியின் சுற்றுச்சூழலை ஒளிப்பதிவாளர் சுவாரஸ்யமாக காட்டியுள்ளார். 
 
படத்தின் மைனஸ்:- 
 
அக்கறை இல்லாத ஒரு பயனாக நடித்திருக்கும் ஜிவிபிரகாஷ் திடீரென பழிவாங்கும் மகனாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சில கதாபாத்திரங்களை ஒழுங்காகக் கச்சிதமாக எடுத்துக் கொண்டாலும் படத்தில் புதிதாக ஏதுமில்லை. படத்தில் சஸ்பென்ஸ் மற்றும் சுவாரஸ்யங்கள் உள்ளன. ஆனால் இறுதியில் வரும் திருப்பம் கதையில் அர்த்தமற்றதாக உள்ளது.
 
மொத்தத்தில் குப்பத்து ராஜாவை எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம்.
 
இப்படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு: 2\5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்கு வருகிறது உலக சினிமா – இயக்குனர் இவரா ?