Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா வந்துடுங்க... சொல்லி முடிப்பதற்குள் கிருஷ்ணாவின் கடைசி நொடிகள்!

Advertiesment
அண்ணா வந்துடுங்க... சொல்லி முடிப்பதற்குள் கிருஷ்ணாவின் கடைசி நொடிகள்!
, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (15:08 IST)
இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேற்று நடந்த கோர விபத்தில் பலியான கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூவரின் இறப்பும் தமிழ் திரையுலகினரை கண்ணீரில் ஆழ்த்தியது. இதில் குறிப்பாக கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன். இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் தான் ஆகிறது. ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. 
 
இந்த சம்பவத்தை குறித்து செட்டில் கிருஷ்ணாவுடன் நெருங்கி பழகிய ஒருவர் கூறியதாவது, கிருஷ்ணாவை போன்ற  நேர்மையான மனிதரைப் பார்க்க முடியாது. செட்டில் எல்லாருக்கும் ரொம்ப பொறுமையாக அன்பாக சொல்லிக்கொடுப்பார். அவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.  இரவு இந்த சம்பவம் நடந்த போது கிரேன் கீழே விழ போவதை அறிந்த கிருஷ்ணா  உடனே அங்கிருந்த ஒரு துணை நடிகையின்  கையை பிடித்து தள்ளிவிட்டார். அண்ணா நீங்களும் வந்துடுங்க என அந்த பெண் சொல்லி முடிப்பதற்குள் அவர் மீது கிரேன் விழுந்து விட்டது. 

webdunia
அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த பெண் இன்னும் மீண்டு வரவில்லை உயிர் போகும் கடைசி நிலையில் தன் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் அடுத்தவரை காப்பாற்றி எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை கொடுத்துவிட்டார் கிருஷ்ணா. யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது எனக்கூறி கதறி அழுதார் அந்த நபர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஃபியா - 1: சினிமா விமர்சனம்