Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முழு அரசு மரியாதையுடன் கிருஷ்ணாவின் உடல் நல்லடக்கம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு

Advertiesment
makesh babu- krishna
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (19:12 IST)
நாளை முழு அரசு மரியாதையுடன், கிருஷ்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. இவர் பண்டாட்டி கபுரம்,  சீதராம ராஜூ,கூடசேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து 70,80 களில்  முன்னணி நடிகராகவும்,சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில், 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பல விருதுகளையும் பெற்றவர் ஆவார். இந்த நிலையில்,  நேற்று உடல் நிலை சரியில்லாததால், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவை, ஐதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், கார்டியாக் அரஸ்ட் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ காட்டமானேனி கிருஷ்ணாவின் உடல் மோசமான நிலையில் ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி  நடிகர் கிருஷ்ணா(80)  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் சந்திரசேகர ராவ், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,. நாளை முழு அரசு மரியாதையுடன் , கிருஷ்ணாவின் உடல்  நல்லடக்கம்  செய்யப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.,

நாளை பொதுமக்கள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக கச்சிபோலி மைதானத்தில்  கிருஷ்ணாவின் உடல் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே, சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ்பாபு, அவரது தாய் இந்திரா தேவி இந்த ஆண்டில் இறந்த நிலையில், இன்று அவரது தந்தையின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் சசிகுமார்!