Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 8 March 2025
webdunia

ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூடுபிடித்த கோழிப்பண்ணை செல்லதுரை சூட்டிங்!

Advertiesment
ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூடுபிடித்த கோழிப்பண்ணை செல்லதுரை சூட்டிங்!
, வியாழன், 21 டிசம்பர் 2023 (17:43 IST)
"ஜோ" படத்தின் வெற்றியை தொடர்ந்து "VISION CINEMA HOUSE" டாக்டர்  டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.


தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன்  போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை"  திரைப்படம்  கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம்.

முக்கிய கதாபாத்திரத்தில் "யோகி" பாபு, கதையின் நாயகனாக அறிமுகமாகும் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச் செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்), சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை,, மற்றும் பலர்….

எழுத்து இயக்கம் : சீனு ராமசாமி
தயாரிப்பு : டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து
இசை :  N.R. ரகுநந்தன்
ஒளிப்பதிவு: அசோக்ராஜ்
வசனம் : பிரபாகர், சீனு ராமசாமி
படத் தொகுப்பு: ஶ்ரீகர் பிரசாத்
கலை இயக்குனர்: R.சரவண அபிராமன்
ஆடை வடிவமைப்பு : v. மூர்த்தி
நடனம்: நோபல்
சண்டைபயிற்சி : ஸ்டன்னர் ஷாம்
பாடல்கள்: "கவிப்பேரரசு" வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதேசி.
நிர்வாக தயாரிப்பு: வீர சங்கர்
டிசைனர் : சிந்து கிராஃபிக்ஸ் பவன் குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
மேக் அப்: A. பிச்சுமணி 
ஸ்டில்ஸ்: மஞ்சு ஆதித்யா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஜீவி' வெற்றி - கிஷன் தாஸ் கூட்டணியில் 'ஈரப்பதம் காற்று மழை'!!