Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை வேட்டையாடும் மாஸ்டர் விஜய்! – ட்ரெண்டாகும் அனிமேஷன் வீடியோ!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (11:48 IST)
நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் மாஸ்டர் ட்ரெய்லர் வராவிட்டாலும் விஜய்யை வைத்து வெளியாகியுள்ள அனிமேஷன் குறும்படம் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் புதிய போஸ்டர் மட்டுமே வெளியானது. இந்நிலையில் விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமா ஹீரோக்கள் வைத்து உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம் ட்ரெண்டாகியுள்ளது.

அந்த விழிப்புணர்வு குறும்படத்தில் மாஸ்டர் பட லுக்கில் வரும் விஜய், அரக்கனாக வரும் கொரொனா வைரஸை ஒரு லத்தியை வைத்து அடித்து நொறுக்குகிறார். தொடர்ந்து அவருக்கு உதவியாக கைதி கார்த்தி, விவேகம் அஜித், எந்திரன் ரஜினி, மாரி தனுஷ் என கோலிவுட் பட்டாளமே குவிவதாக காட்டப்பட்டுள்ளது. இறுதியாக வரும் 24 பட சூர்யா டைம் ட்ராவல் செய்து சைனாவில் வௌவால் சூப் சாப்பிடாமல் தடுப்பதாகவும் காட்சிகள் உள்ளது. விஜய் பிறந்தநாளான இன்று இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments