Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வசூலில் மாஸ் காட்டும் நயன்தாரா!

Advertiesment
வசூலில் மாஸ் காட்டும் நயன்தாரா!
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (14:21 IST)
வித்தியாசமான கதையுடன் நயன்தாராவை அப்ரோச் செய்து நடிக்க ஓகே வாங்கியவர் புதுமுக இயக்குனர் நெல்சன். இவரது அந்தக் கதையில் நயன்தாராதான் கதை நாயகி. கதை நாயகன் யோகி பாபு. 
கோலமாவு கோகிலா என்ற பெயருடன் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னாடி 'எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு', என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலுடன், கடந்த வெள்ளிக்கிழமை படம் பார்க்க சென்றனர். 
 
படத்தைப் பார்த்த அத்தனை ரசிகர்களும் வயிறு குலுங்க சிரித்து வெளியே வந்தனர். படத்தின் பாடல்கள், காமெடி கதை என அத்தனையும் சூப்பர் என்று நயன்தாராவை புகழ்ந்து தள்ளினர். யோகிபாபுவையும் புகழ்ந்து பாராட்டினர்.
 
இதனால் கோலமாவு கோகிலா சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1.58 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா படம் பல கோடி வசூலிக்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி செஞ்சாதான் ரசிகர்களை இழுக்க முடியும்: தமன்னா