கோச்சடையான் சௌந்தர்யாவின் ரொமான்டிக் காமெடி
கோச்சடையான் சௌந்தர்யாவின் ரொமான்டிக் காமெடி
கோச்சடையான் படத்தை இயக்கி ரஜினிகாந்தையே வெலவெலக்க வைத்த சௌந்தர்யா அஸ்வின் தனது அடுத்தப் படத்தை விரைவில் ஆரம்பிக்கிறார்.
மோஷன் கேப்சர் போன்ற ஹைடெக் சமாச்சாரங்கள் இல்லாமல் சாதாரண படமாக இது உருவாகிறது என்பது இன்டஸ்ட்ரிக்கே ஆறுதல்.
சௌந்தர்யா அஸ்வினின் இரண்டாவது படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. படத்தின் கதை, ஸ்கிரிப்ட் தயார். விரைவில் நடிகர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
சௌந்தர்யாவின் இரண்டாவது படத்தில் தனுஷ் இடம்பெறுவார் என முன்பு செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பேசிய சௌந்தர்யா, அப்படி எந்த திட்டமும் இல்லை, தனுஷ் கண்டிப்பாக இந்தப் படத்தில் நடிக்கலை என்றார்.
விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்