Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பிகில்’ ரூ.300 கோடி வசூல் செய்ததாக கூறிய டிராக்கருக்கு பதிலடி கொடுத்த நிறுவனம்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (21:09 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனது என அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற ஸ்கிரீன் சீன் நிறுவனமும் தெரிவிக்கவில்லை, அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும்  இதுவரை தெரிவிக்கவில்லை. 
 
ஆனால் சம்பந்தமே இல்லாத மூவி டிராக்கர்ஸ்கள்  பிகில் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து விட்டதாகவும், ரூ.300 கோடி வசூல் செய்து விட்டதாகவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விசுவாசம் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூபாய் 125 கோடி வசூல் செய்ததாக கேஜேஆர் நிறுவனம் தெரிவித்தபோது, தற்போது பிகில் 300 கோடி ரூபாய்வசூல் செய்ததாக கூறும் அதே டிராக்கர்தான் அதனை நம்ப மறுத்தனர். ஒரே வாரத்தில் 125 கோடி ரூபாய் வசூல் என்பதை நம்ப முடியாது என்றும் அந்த படத்தின் விநியோகஸ்தர் தவறாக கூறுவதாகவும் கூறியுள்ளனர்
 
இதற்கு கேஜேஆர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. சிலர் இப்படியும் பேசுவாங்க அப்படியும் பேசுவாங்க, ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிகிட்டு இருந்தால் நம்ம வேலை ஆகாதே. பிகில் சக்ஸஸா? நாங்க ஹாப்பி! நாளைக்கு தர்பார் சக்ஸஸா? அதுக்கு நாங்க ஹாப்பி, எல்லாம் நம்ம தமிழ் இண்டஸ்ட்ரி தானே என்று பதிலளித்துள்ளார் இந்த பதில் மூவி டிராக்கர்களுக்கு செம நோஸ்கட் ஆக இருப்பதாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments