Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வணக்கம்டா மாப்ள ! – பிகில், கே ஜி எப் ஸ்டைலில் பஜ்ஜி டிவிட் !

Advertiesment
ஹர்பஜன் சிங்
, திங்கள், 18 நவம்பர் 2019 (09:09 IST)
ஹர்பஜன் சிங் சி எஸ் கே அணிக்காகவே அடுத்த ஆண்டும் விளையாட உள்ளதால் மகிழ்ச்சி தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை கழட்டிவிடுதல், சக அணிகளுக்குள் மாற்றிக் கொள்ளுதல் ஆகிய ரிடென்ஷனை செய்து வருகின்றனர். இதில் சென்னை அணியில் கேதார் ஜாதவ், மோஹித் சர்மா; சாம் பில்லிங்ஸ், டேவிட் பில்லி, துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷனாய் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர்.

சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் அணியில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளார், இது குறித்து மகிழ்ச்சியான டிவிட் ஒன்றை பிகில் பட வசன பாணியில் பதிந்துள்ளார். அதில் ‘ வணக்கம் டா மாப்ள!#CSK டீம் ல இருந்து  இந்த ரிட்டென்ஷன் என்னாலயா.இல்ல உங்கனாலயா.தமிழூ..எத்தனையோ துரோகங்கள்,போலிகளுக்கு நடுவுல @ChennaiIPL ஒரு"எல்டோரா".என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு.இந்த @IPL Retention ல ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன்.CSK #IPL2020’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஆஃப்கன் வீரர்கள்!!