Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித், விஜய் விக்ரம் படத்தில் நடித்தவர் பிக் பாஸ் போட்டியாளரா? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (10:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பதையும் முதல் புரோமோ வீடியோவையும் அவர் வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ரம்யா பாண்டியன், மணிமேகலை, புகழ், சூர்யா தேவி, ஷிவானி உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது நடிகை கிரண் அவர்களும் இணைந்துள்ளார். அஜித் நடித்த வரலாறு, விக்ரம் நடித்த ஜெமினி, விஜய் நடித்த திருமலை உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கிரண், கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மை என்றால் பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறப்படுகிறது. முந்தைய சீசன்களில் நமீதா, மும்தாஜ் ஆகியோர் இடத்தை இவர் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் அன்றைய தினம் நடைபெறும் முதல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்த படுவார்கள் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments