Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பானில் ரிலீஸ் ஆகும் கே ஜி எஃப் … ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு!

ஜப்பானில் ரிலீஸ் ஆகும் கே ஜி எஃப் … ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு!
, வியாழன், 13 ஜூலை 2023 (07:49 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் முதல் பாகம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 2022 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இரண்டாம் பாகத்தின் முடிவில், மூன்றாம் பாகத்துக்கான இணைப்பு ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கே ஜி எஃப் இரண்டு பாகங்களும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

ஜப்பானில் இந்த இரு பாகங்களும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் ஜப்பானில் டப் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நான் கண்ட கனவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்…” ஷாருக் கானுக்கு நன்றி தெரிவித்த் அட்லி!