சூர்யா- ராக்கி பாய் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தற்போது, சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவின் இப்படத்திற்கும், பாலா இயக்கத்தின் அவர் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கேஜிஎஃப் 1,2 பட வெற்றியின் மூலம் பான் இந்திய ஸ்டாராக உயந்துள்ள யஷும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது, இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இருவரும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசி கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj