Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் 'பீஸ்ட் உடன் மோதும் ' கே.ஜி.எப் '?

விஜய்யின் 'பீஸ்ட் உடன் மோதும்  ' கே.ஜி.எப் '?
, சனி, 12 மார்ச் 2022 (22:56 IST)
பீஸ்ட் படத்துடன் கே.ஜி.எப் படம் மோத வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்  விஜய்.  நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்-பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வரும்  ஏப்ரல் மாதம் 13 ஆம்  தேதி  கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  பீஸ்ட் படத்துடன்  கே.ஜிஎப் படம் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் சேப்டர் 1 என்ற படத்தில்  நடிகர் யாஷ் நடித்தார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டர் 2 படம்  வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என கூறப்படும் நிலையில் இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வலிமை 'பார்த்தேன். அதிர்ந்தேன் - ரங்கராஜ்பாண்டே விமர்சனம்