Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே ஜி எஃப் படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மரணம்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:20 IST)
கேஜிஎஃப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் கிருஷ்ணா ஜி ராவ்.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்த இரு பாகங்களிலும் கண் தெரியாத முதியவர் வேடத்தில் நடித்திருந்தார் கன்னட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். இரண்டாம் பாகத்தில் அவர் பேசும் “அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் “ என்ற வசனம் மிக பிரபலமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் நேற்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி கேஜிஎப் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments