Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

YouTube டிரெண்டிங்கில் விஜய்யை முந்திய பிரபல நடிகர்!

Advertiesment
YouTube டிரெண்டிங்கில் விஜய்யை முந்திய பிரபல நடிகர்!
, புதன், 7 டிசம்பர் 2022 (22:22 IST)
நடப்பு ஆண்டில் யூடியூப் டிரெண்டிங்கில்  தென்னிந்திய சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகிய இரு நடிகர்களின் படப்பாடல்கள் டிரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது..

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 1 படத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் அமைந்த பாடல்கள் சூப்பர் ஆகின. இதில், ஸ்ரீவள்ளி என்ற பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
 

ALSO READ: புஷ்பா படத்தை அடுத்து மீண்டும் ஒரு ஐட்டம் டான்ஸ்: சமந்தா முடிவு!
 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள், தமிழகம் தாண்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மா  நிலங்களிலும்  நல்ல வரவேற்பை பெறும். அதேபோல், அவர் படத்தில் இடம்பெறும் பாடல்களும் உலகளவில் சூப்பர் ஹிட் ஆகும். அதன்படி, இந்த ஆண்டு, நெல்சன் இயக்கத்தில், விஜய் -பூஜா ஜெக்டே நடிப்பில், அனித் இசையில் வெளியான அரபி குத்து பாடல்  யுடியூப்பில் 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.


3 வது இடத்தில் புஷ்பா பட பாடல் சாமி சாமியும், , 4 வது இடத்தில் கச்சா பாதாம் பாடலும்,  5 வது இடத்தில் கோககோலா பாடலும் இடம்பிடித்துள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட நடிகையை காதலிக்கும் சல்மான் கான்?