Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் -2 பட டீசர் ரிலீஸ்...குறைந்த நேரத்தில் 1 மில்லியன்ஸ் லைக்ஸ்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (23:06 IST)
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில்,கேஜிஎஃப் படத்தின் டீசர் வரும் ஜனவரி 8 ஆம் தேதி  வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரின் ஒரு பகுதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி, காலை 10;18க்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலயில் தற்போது கே.ஜி.எஃப் படக்குழு இப்படத்தின் டீசரின் ஒரு பகுதியை நடிகர்  யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் செம ஸ்டைலிஸாக உள்ள யாஷ், ரசிகர்களுக்கு விருந்து வைப்பது போன்று ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ளது. டீசர் வெளியான குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனைபடைத்துள்ளது. kgfchapter2
 
#HappyBirthdayYash #KGFChapter2Teaser #KGFChapter2 
@TheNameIsYash
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments