கேஜி எப் மற்றும் புஷ்பா போன்ற படங்கள் வட இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.
இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 1200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதிலும் வட இந்தியாவில் கணிசமான தொகையை இந்த திரைப்படம் வசூல் செய்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இந்த படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா “பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை 30 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை என்று கூறினார். அவர்களுக்கு லாஜிக் இல்லாத இந்த படத்தின் வெற்றி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.