Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.ஜி.எஃப் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்??

கே.ஜி.எஃப் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்??
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (12:24 IST)
கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

கன்னடத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படமான கே.ஜி.எஃப் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்தது.  இந்த திரைப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமன்றி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியான நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்தது.
webdunia

கன்னட திரைப்பட வரலாற்றில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் இது தான். தற்போது கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்பட படபிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதலால் நீதிமன்றம் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"வெறித்தனமான பிகில் டீசர்" முதல் விமர்சனம் இதோ !