Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் கலக்கும் கே ஜி எப் 2…. வெளியானது சூப்பர் அப்டேட்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:25 IST)
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று திரைப்படம் உலகம் முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கேஜிஎப் 2 இத்தனை திரைகளில் ரிலீஸாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தும் இந்த படத்துக்கு 350 திரைகள் வரை மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் நேற்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகளவில் வெளியாகி இருந்தது. இதையடுத்து இப்போது கேஜிஎப் 2 வுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் நாளையில் இருந்து ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள மெஹ்பூபா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments