கே.ஜி.எஃப்-2 படம் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீசானது.
பீரியட் ஆக்சன் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமான கே ஜிஎஃப்-2 படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ .134.5 கோடிக்கு வசூல் குவித்துள்ளததாகவும், , 2 வது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இ ந்நிலையில், கே ஜிஎஃப்-2 படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள் கே ஜிஎஃப்- 3 வது பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தனர். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இது ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது பான் இந்தியா படமாக வெளியான கே ஜிஎஃப்-2 படம் தெலுங்கில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து ரஜினி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இதை சினிமாத்துறையினர் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கே.ஜி.எஃப் படத்தைப் பார்த்த சூப்பர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரை தொலைபேசியின் மூலம்தொடர்புகொண்டு பாராட்டினார். அதேபோல் நடிகர் யாஷ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியது குறிப்பிடத்தகக்து.