அண்ணாத்த படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவரையும் மிரளவைத்துள்ளாராம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் ஒரு பாடலைக் கூட படத்தில் இருந்து நீக்கியுள்ளதாம் படக்குழு.
பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் சிறுத்தை சிவா. இந்நிலையில் கடந்த நாட்களில் நடந்த படப்பிடிப்பில் அனைவரையும் கவர்ந்தது கீர்த்தி சுரேஷின் நடிப்புதானாம். படத்தில் ரஜினிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருக்குமாம்.