Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சேச்சியான கீர்த்தி சுரேஷ் - கிண்டலடிக்கும் தமிழ் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (11:50 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .

அதன் ஒரு பகுதியாக பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க போட்டி படுகைகளை எடுத்துக்கொண்டு அக்கட தேசத்திற்கு பறந்தார். ஆனால், அங்கு கிடைத்த வாய்ப்பும் கை நழுவி போக பின்னர் மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கே வந்துவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் கேப் இன்றி நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வரும் ‘‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’‘ என்ற வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்து வருகிறார்.


மோகன் லால் நடித்து வரும் இப்படத்தில் கீர்த்தி முழுமையாக பழங்காலத்து சேச்சியாக உருமாறியிருக்கிறார். இதே படம் தமிழில் "மரக்கார்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் கீர்த்தி சுரேஷ் தோற்றம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன் மண்டையில் கொண்டை வைத்து வேட்டி போல் சேலை உடுத்தியுள்ள கீர்த்தி சுரேஷை தமிழ் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments