விஜய்யின் பிறந்தாளுக்கு கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடிய 'ஆல்தோட்ட பூபதி' வீடியோவை 70 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனம் ஆடி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் பேரும், ஃபேஸ்புக், ட்விட்டரில் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் பார்த்துள்ளனர். நடிகர் விஜய் உடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ஒரு தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.